Sunday, August 30, 2009

"சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளிவந்த எனது "சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்" கவிதை வாசிக்க...

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்
------------------------------
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று
வரிகள் துவங்கியிருந்தன.
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

12 comments:

  1. நல்லா இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  2. நன்றி செல்வராஜ் ஜெகதீசன்

    ReplyDelete
  3. தனக்கு தனக்குன்னா செலவு படக்கு படக்குன்னு

    -------------

    எதார்த்தம்.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

    ReplyDelete
  5. தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்கும் நாம் காட்டும் வித்தியாசம். அருமை

    ReplyDelete