சமீபத்தில் நவீன விருட்சத்துக்கு அனுப்பிய எனது "இரவெல்லாம்" மற்றும் "சட்டையொன்று" கவிதைகளை இங்கு பகிர்கிறேன்
இரவெல்லாம்
----------------------
இரவெல்லாம் கத்தியபடி
வழியெங்கும்
வயிறு வெடித்து
கிடந்த தவளைகள்
நினைவூட்டுகின்றன
முன்தின மாலையின்
நமக்கான பிரிவொன்றை
சட்டையொன்று
----------------------
என்னை
தன்னுள்ளே உடுத்தியபடி
சட்டையொன்று கிளம்பியது.
எதிர்வந்தவர்கள்
நலம் விசாரிக்க
என்னை இறுதிவரை
பேசவிடாமல்
தன்னைப் பற்றியே
பெருமையடித்து தீர்த்தது.
புறக்கணிப்பின் உச்சத்தில்
ஒரு நாள்
சட்டைக்குள்ளிருந்த
நானொன்று
அம்மணமாக வெளியேறியது
யாரிடமும் சொல்லாமல்
- நன்றி
என். விநாயக முருகன்
பிரமிப்பு ஏற்படுத்துகிறீர்கள் விநாயகம்.நன்றி,தொடக்க பள்ளிக்கான கவிதைக்கு.அன்பு,இங்கிருக்கிற இரண்டு கவிதைகளுக்கும்,உங்களுக்கும்.
ReplyDeleteஅற்புதம் இரண்டு கவிதைகளுமே
ReplyDeleteநண்பரே
நவீன விருட்சத்தில் வாசித்தேன்
நன்றி ராஜாராம்
ReplyDeleteநன்றி நேசமித்ரன்
ReplyDelete//இரவெல்லாம் கத்தியபடி
ReplyDeleteவழியெங்கும்
வயிறு வெடித்து
கிடந்த தவளைகள்
நினைவூட்டுகின்றன
முன்தின மாலையின்
நமக்கான பிரிவொன்றை//
கவிஞன் வார்த்தைகளின் காதலனாக இருக்க வேண்டும் என்று மலேசிய மூத்த எழுத்தாளர் சண்முகசிவா அடிக்கடி சொல்வார். உங்களின் வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக் கொடுத்திருக்கின்றன. வாழ்த்துகள்
நன்றி பாலமுருகன்
ReplyDelete