Monday, August 31, 2009

"ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை" - உயிரோசை கவிதைகள்

உயிரோசை மின்னிதழில் வெளியான எனது "ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை" மற்றும் "பார்வைகள்" கவிதைகள் வாசிக்க...

ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
---------------------------------------------
யாரோ கேட்டார்கள்.
இன்று மழை வருமா?
வரலாம்.
வராது.
வரவேண்டாம்.
வரக்கூடும்.
வரவேண்டும்..

இவற்றில்
எந்த ஒன்றைச் சொல்வது?
நமக்கான சந்திப்பின்
இன்றைய
இட‌ம் பொருள் பற்றிய
தெளிவான தகவல் வராதவரை

2.
ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்



பார்வைகள்
---------------------------
பெண் தோழிகளுடன்
பேசும்போதும்
வீசாமல் இருக்க முடிவதில்லை
ஒருக்கணமேனும்
மார்புகளை நோக்கி

பெண் கடவுள்களை
வழிபடுகையில் மட்டும்
கொஞ்சம் கூடுதல்
பயத்துடன்



-நன்றி
என். விநாயக முருகன்

10 comments:

  1. முதல் கவிதை,மூன்றாவது கவிதை நல்லா இருக்கு விநாயகம்.மூன்றாவது ரொம்ப நல்லா!

    ReplyDelete
  2. muunravathu kavithai romba nalla irukku

    marra kavithaikalum arumai nanbare

    ReplyDelete
  3. பார்வைகள் is very good.
    I have added it to the படித்தது / பிடித்தது series in my site:
    http://www.writercsk.com/2009/09/63.html

    ReplyDelete
  4. இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. மழை பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. நகுலனின் பிரபல கவிதை ஒன்று :

    உள்ளே நானிருந்தேன்
    வெளியில் நல்ல மழை
    ஒரு சொரூப நிலை

    ReplyDelete
  5. ஒரு மழை இரவின்
    திடீரென இறங்கிய
    இடிச்சத்தத்தில்
    அர்ச்சுனாவென்று அலறி
    கட்டிப்பிடித்தாய் என்னை
    கீதாஉபதேசம் பெற்றேன்


    பெண் கடவுள்களை
    வழிபடுகையில் மட்டும்
    கொஞ்சம் கூடுதல்
    பயத்துடன்

    அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மூன்றுமே நச்.. மூன்றாவது நச்சோ நச்.

    ஜ்யோவ் வலைபூவிலிருந்து

    D.R.Ashok

    ReplyDelete
  7. நன்றி ராஜாராம்

    நன்றி மண்குதிரை

    நன்றி சரவணகார்த்திகேயன்

    நன்றி சுந்தர்

    நன்றி விசுவநாதன்

    நன்றி அசோக்

    நன்றி நண்பர்களே. எனது அலுவலகத்தில்
    சகநண்பரொருவர் மூன்றாவது கவிதை படித்து என்னை செமையாக திட்டினார்.

    ஏதாவது ஒரு தருணத்திலாவது நான் பெண் தெய்வத்தின் முலைகளை சற்று சபலமாகவோ, ஆர்வமாகவோ கவனித்துள்ளேன்.மற்றவர்களுக்கு இது நேர்ந்துள்ளதா. தெரியவில்லை. தயவு செய்து தெளிவுப்படுத்தவும். நான் சைக்கோவோ அல்லது சாடிஸ்டா என்று எனக்கு குழம்புகிறது. தெய்வ நிந்தனை செய்துவிட்டதாக நினைத்தால் நான் கன்னத்தில் போட்டுக்கொள்ளுகிறேன்

    ReplyDelete
  8. எனக்கு தோன்றியிருக்கிறது. இது இயல்பு தான். தெய்வ சிலையை கலைக்கண்னோடு பார்ப்பதினால் வரும் விளைவு.

    அப்புறம் பெண்னை உடலாய் பார்ப்பது ஆணின் இயல்பு. வயதானபிறகு மாறலாம். after 50's.

    தயவு செய்து பெண்னை ஆன்மாவாக பாரு, தாயாக பாரு என்று யாரும் lecture கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.:)

    ReplyDelete
  9. அசத்தல் கவிதைகள் :-)

    ReplyDelete
  10. நன்றி அசோக்
    நன்றி சென்ஷி

    ReplyDelete