Friday, August 14, 2009

எனது மூன்று கவிதைகள் - திண்ணை.காம்

திண்ணை.காம் ல் வெளியான எனது மூன்று கவிதைகள் வாசிக்க...

ஒரு விசாரிப்பு
--------------------

நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்‌‌‌
எப்படி இருக்கிறாய்?
எப்படி போகிறது? கேட்டான்.
அப்படியேத்தான் இருக்கின்றேன்
அப்படியேத்தான் போகிறதென்றேன்
சுவாராசியமற்றவனா‌‌‌ய்
துண்டித்தான் தொடர்பை
அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்?


சரிபார்த்தல்
------------------
நீ‌ங்க‌ள் டயல் செ‌ய்த
எண்ணை சரிபார்க்கவும்
என்று சொன்னதில் குழம்பி
மீண்டும் தொடர்பு கொண்டேன்
இந்த முறையும்
அதையே சொன்னாள்
நான் சரிபார்த்த
தகவலை எப்படி
புரியவைப்பது
இவளுக்கு?


பெருநகர கோடாங்கி
-----------------------
பெருநகரில் அபூர்வமாக
பார்த்த ஒரேயொரு
குடுகுடுப்பைக்காரனுக்கும்
கிராமத்துக்கோடாங்கிக்கும்
மாறியிருக்கவில்லை
எதுவும் பெரிதாக
கையேந்துவது உட்பட
ஒரு வித்தியாசமாய்
பெசண்ட் நகரின்
மின்சார சுடுகாட்டில்
இரவெல்லாம்
இருந்துவிட்டு வந்ததை
தவிர

6 comments:

  1. muunaavathu kavithai enakku pitiththirukkirathu

    ReplyDelete
  2. முதற்கவிதை இயல்பாகப் பேசுகிறது!!
    முகுந்த் நாகராஜனின்
    http://veenaapponavan.blogspot.com/2009/05/blog-post.html

    இக்கவிதை ஏற்படுத்திய யதார்த்தத்திற்கு பிறிதொருமுறை கூட்டிப் போகிறது உங்கள் வரிகள் :))

    ReplyDelete
  3. நன்றி கார்த்தி. முகுந்த் நாகராஜின் அந்த கவிதையை படித்து பார்த்தேன். அவரது எதார்த்த வரிகள் அருமை அருமை.

    ஒரே சிந்தனை இரண்டு பேருக்கு சில நேரங்களில் வந்து விடுவதை தவிர்க்க முடிந்ததில்லை. :(

    ReplyDelete
  4. மூன்றுமே பிடிச்சுருக்குங்க.

    ReplyDelete
  5. //அப்படியே இருந்து
    அப்படியே போவதிலென்ன
    அப்படியொரு ஏமாற்றம்?//

    நல்லா கேட்டீங்க.

    ReplyDelete