Sunday, November 8, 2009

நிஜம் - திண்ணை.காம் & கீற்று.காம் கவிதை

இந்த வார திண்ணை.காம் மற்றும் கீற்று.காமில் வெளியான நிஜம் கவிதை...


நிஜம்
ஆறு வாரங்கள் ஓடிய
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
ரியாலிட்டி ஷோவொன்றில்
ஆறாவது வாரம் நடந்தது
நிஜமான கல்யாணமாம்.
ஆறு வாரமும் நடந்த
சுயம்வர ஒளிப்பரப்பும்,
நேர்காணல்களும் நிஜமாம்.
எல்லாம் முடிந்தபின்னர்
எட்டாவது வாரம் நடந்ததும்
நிஜமான விவாகரத்தாம்.
ஆறாவது நிஜத்துக்கும்,
எட்டாவது நிஜத்துக்கும்
ஆறு வித்தியாசங்களாம்.


- நன்றி
என்.விநாயக முருகன்

4 comments:

  1. ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்ததுதான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நண்பா! என்னாச்சு?!
    ரஜினி பாணியில் 'ரிப்பீட்டு'?!!

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி சுந்தர்
    நன்றி தியா
    நன்றி கேயார்

    சிலருக்கு கவிதை புரியவில்லை.அதான் புகைப்படத்துடன் கவிதையை மீண்டும் பிரசுரம் செய்தேன்.

    ReplyDelete