நான்கு கவிதைகள்
—————————————————
ஜி-8
————
ஜி-8 மாநாட்டை சீர்குலைக்க
வந்த தீவிரவாதிகளை
நீண்ட புலனாய்வுக்கு பிறகு
கண்டுபிடித்தார்களாம்.
உயர்பாதுகாப்பு அதிகாரி
செய்தியாளர்களிடம் சொன்னார்.
பிடிபட்டது மூன்று பேராம்.
நீண்ட கூரான ஆயுதங்கள்
மொத்தம் ஆறு வைத்திருந்தார்களாம்.
கண்டனம் தெரிவிக்க
கருப்புநிற ஆடைகள் அணிந்திருந்தனராம்.
குறிப்பாக தாடி வைத்திருந்தார்களாம்.
சந்தேகமே இல்லை. அவர்களேதான்.
மென்மையான விசாரிப்புக்கு பிறகு
இரண்டுபேர் குற்றங்களை
ஒப்புக்கொண்டார்களாம்.
ஒன்று மட்டும்
இன்னமும் பிடிவாதமாக
மே..மே…மே… என்று கத்திக்கொண்டிருக்கிறதாம்.
ஓடிப்போனவன்
——————————————–
ஓடிப்போன நண்பன்
நாலு நாள் கழித்து
வீடு திரும்பினான்.
விம்மியபடி வாசல் வந்து
கட்டிக்கொண்டாள் அவனின் மனைவி.
ஐந்துவயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை
கொள்ளிப்போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப்பட்டார்கள் நண்பர்கள்.
பாவம்
என்ன கஷ்டமோ?
என்ன ஞானமோ?
பாதியில் வந்துவிட்டான்.
நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை.
மழை- ஒரு உண்மை
————————————————————
மழை எனக்கு பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக
மழைப்பற்றி கவிதையெழுதுவது
இன்னும் பிடிக்கும்.
இன்னும் குறிப்பாக
ஜன்னலுக்கு வெளியே
பெய்யும் மழையை எழுத பிடிக்கும்.
இறுதி குறிப்பாக
ஜன்னலுக்குள்ளிருந்து எழுத பிடிக்கும்.
மூன்றாவது மற்றும் நான்காவது கவிதைகள் பட்டாசு நண்பரே.. ரொம்பப் பிடித்து இருக்கின்றன
ReplyDeletevery nice..
ReplyDelete1. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
ReplyDelete2. பகடியிலும் சேர்க்க முடியாது
3. இது மட்டுமே தேறுது
4. பல கவிஞர்களின் வாசனை
so third one is my choice
//ஜன்னலுக்கு வெளியே
ReplyDeleteபெய்யும் மழையை எழுத பிடிக்கும்.
இறுதி குறிப்பாக
ஜன்னலுக்குள்ளிருந்து எழுத பிடிக்கும்.//
apt one!
-Keyaar
ஓடிப்போனவன் மற்றும் மழை கவிதைகள் அருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே
ReplyDeleteஉங்களது தொலைபேசி எண் தர முடியுமா.
என் மின்னஞ்சல் nilaraseegan@gmail.com
நன்றி.
g-8 பிடிச்சுருக்கு.மற்ற மூன்றும் ரொம்ப பிடிச்சுருக்கு விநாயகம்.
ReplyDeleteஓடிப்போனவன் கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.
ReplyDeleteநன்றி கார்த்திகைப் பாண்டியன்
ReplyDeleteநன்றி கார்த்திகேயன்
நன்றி அசோக்
நன்றி கேயார்
நன்றி நந்தா
நன்றி நிலாரசிகன் (மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்)
நன்றி ராஜாராம்
நன்றி சுந்தர்