நவீன விருட்சம் வலைப்பூவில் எனது இரண்டு கவிதைகள் வாசிக்கலாம்...
கண்ணீர் அஞ்சலி
-----------------
நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்
கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன
கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
என்று அச்சாகி இருந்தது.
இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உடன் இருந்தனர்
மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.
நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்
இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை
ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது
விசாரித்தல்
-----------------
எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்
சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?
நல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்
ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
-நன்றி
என்.விநாயக முருகன்
தோழா!
ReplyDeleteபோட்ட கவிதையையே போடுகிறீர்கள்
ரெண்டாவது கவிதையைச் சொல்கிறேன்!
முதல் கவிதை டாப் டக்கர்!
-கேயார்
நீங்கதான் கடைசி வரைக்கும்
ReplyDeleteவருத்தப்பட்டுக்கிட்டே இருந்திருப்பீயளோன்னு நெனக்கேன்!
அதென்ன ரெண்டுலயும் சாவு பத்தியே எழுதிருக்கீக?!
-பருப்பு ஆசிரியர்
இரண்டாவது ஏற்கனவே வாசித்ததுதான்.முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு விநாயகம்.வாழ்த்துக்கள்!
ReplyDeletenice
ReplyDeleteநன்றி தோழா.
ReplyDeleteஇரண்டாவது கவிதை இப்போதுதான் எழுதுகின்றேன்
நன்றி (Mis)Chief Editor
நன்றி பா.ராஜாராம் (இரண்டாவது ஏற்கனவே வாசித்ததுதான்-இரண்டாவது கவிதை இப்போதுதான் எழுதுகின்றேன்)
நன்றி நந்தா