Monday, November 23, 2009

சும்மா ஒரு கவிதை

ஜ்யோவ்ராம் சுந்தரின் சும்மா இருத்தல் கவிதை படித்ததும் எனக்கும் சும்மா ஒரு கவிதை எழுத தோன்றியது.சும்மா படித்து பாருங்க


சும்மா ஒரு கவிதை
——————————————————

எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
எ‌ன்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை

சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினா‌‌‌ன்.

சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்

பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்

பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினா‌‌‌ன்

சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்

10 comments:

  1. ஹா..ஹா..அருமை,விநாயகம்.ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  2. அருமையாஅருமையான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  4. சும்மான்னு உண்மையாய் ஒரு கவிதை.... நல்லாயிருக்கு.

    ReplyDelete
  5. நன்றி பா.ரா
    நன்றி கார்த்திகைப் பாண்டியன்
    நன்றி தியா
    நன்றி சுந்தர்
    நன்றி கருணாகரசு

    ReplyDelete
  6. ரொம்பவும் அருமையான கவிதை!
    கலக்கிட்டீங்க!

    -கேயார்

    ReplyDelete