Friday, November 6, 2009

பளிச் கவிதை - 2 --- "நட்பு"

இந்த வார திண்ணை.காமில் வ‌ந்த நாவிஷ் செந்தில்குமார் கவிதையொன்று...

நட்பு

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...


நாவிஷ் செந்தில்குமார் எனது அலுவலகத்தில்தான் பணிபுரிகின்றார். எங்கள் அலுவலகத்தின் வலைப்பூக்களில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். தவிர திண்ணை.காம், கீற்று.காமில் இவரது பல கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன.


-நன்றி
என்.விநாயக முருகன்


பளிச் கவிதை-1

9 comments:

  1. கடந்த காலங்களை நினைவூட்டிய கவிதை...

    என்னை நெகிழ வைத்த கவிதை....
    செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

    -கேயார்

    ReplyDelete
  2. அவருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அற்புதமான எழுத்து.பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. அவருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.கவிதை நல்லாயிருந்தது.

    ReplyDelete
  5. ஐயோ...அருமையான அறிமுகம் விநாயகம்.அவசியம் போகணும்.நன்றி!

    ReplyDelete
  6. நன்றி மண்குதிரை
    நன்றி கேயார்
    நன்றி அசோக்
    நன்றி ராஜசூரியன்
    நன்றி கருணாகரசு
    நன்றி ராஜாராம்
    நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  7. நன்றி வினய்...
    நண்பர் ராஜாராம் மூலமாகவே தெரிய வந்தது...
    :-)

    ReplyDelete