Saturday, November 28, 2009

தப்பில்லை & இரக்கம்

தப்பில்லை
----------
வெளியில் தெரியாத வரை
கடவுளை கூட புணரலாம்
கனவிலும், கற்பனையிலும்
தப்பில்லை


இரக்கம்
---------
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போதெல்லாம்
பின்னிரவில் பார்க்க நேரிடுகிறது
பிளாட்பாரத்தில் உறங்கும் குழந்தைகளை

இருப்பதிலேயே அழகான
ஏதாவது குழந்தையை
மனதுக்குள் தத்தெடுத்து
வீடுவரை அழைத்துசெல்கிறேன்
வீட்டினுள் செருப்பை கழட்டியவுடன்
அதையும் துரத்தி விடுகின்றேன்

6 comments:

  1. அருமையான கவிதைகள்!

    -கேயார்

    ReplyDelete
  2. இரக்கம் தப்பில்லை

    ReplyDelete
  3. அருமையான கவிதைகள்..
    எதார்த்தமான நடைமுறை எண்ணங்கள்..
    அற்புதமான வெளிப்பாடு....

    ReplyDelete
  4. தப்பில்லை தப்பாக படுகிறது....

    இரக்கம்...சிறப்பாக இருக்கிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. யதார்த்தம்.. முதல் கவிதை மாதிரி நானும் கொஞ்சம் யோசிச்சு இருக்கேன்..

    ReplyDelete
  6. நன்றி கேயார்
    நன்றி அசோக்
    நன்றி கமலேஷ்
    நன்றி கருணாகரசு
    நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete