கீற்று.காமில் வெளியான எனது "தொலைந்துப் போனவைகள்" கவிதைகளை வாசிக்க...
தொலைந்துப் போனவைகள்
----------------------------
1
தொலைந்துப்போன பொருளை
கண்டுபிடிக்கவும்
கவ்வி இழுக்கவும்
பழக்கப்பட்டிருந்த
மோப்ப நாயொன்று
முன்பு எப்போதோ
தாயைக்கூட தொலைத்திருந்தது.
2
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கிச் சென்றவன்
நழுவவிட்ட செருப்பொன்று
சாலையில் கிடந்தது
அநாதையாக அடிப்பட்டபடி.
எப்படி வலிக்குமோ
எங்கோ கிடக்கும்
இன்னொரு செருப்புக்கு
3
தொலைந்துப்போன
பழைய நண்பனொருவனை
நீண்ட நாட்கள் கழித்து
பார்க்க நேரிட்டது.
அவன்
புதிதாய் சேர்ந்த வேலை
புதிதாய் வாங்கிய கார்
புதிய மாடல் மொபைல்
புதிதாய் கட்டும் வீடு
சமீபத்தில் சென்றுவந்த
நாட்டைப்பற்றிய புதிய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
புதிய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்
நன்றி
என்.விநாயக முருகன்
//முன்பு எப்போதோ
ReplyDeleteதாயைக்கூட தொலைத்திருந்தது//
//இவற்றோடு எனக்கு
புதிய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்//
எளிய வார்த்தைகள்
சிறு நிகழ்வுகள்
கவிதயாக்கும் சூட்சமம்
அழகாக கைகூடுகிறது உம்மிடம் :)
நன்றி அசோக்
ReplyDeleteமூணுமே நல்லா இருக்கு விநாயகம்.
ReplyDeleteநன்றி ராஜாராம்
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ithu nalla irukku nanba
ReplyDeleteதொலைந்து போனவர்கள் ஒரு வலியை ஏற்படுத்தும் உணர்வைக் கொடுக்கக்கூடிய வரிகள். வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அகநாழிகை
ReplyDeleteநன்றி பாலமுருகன்
ReplyDelete