திண்ணை.காமில் எனது இந்த கவிதை வாசிக்கலாம்...
பணமா? பாசமா?
———————————————
பட்டிமன்றமொன்றில்
பணமா…பாசமாவென்று பேச
பாசத்துடன் அழைத்தார்கள்.
பாசமென்ற தலைப்பில்
பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன்.
கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம்.
பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக
அணி மாற சொன்னார்கள்.
பாசத்தையெல்லாம் அடித்து
பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன்.
சற்றுக்கழித்து வந்த தகவலில்
நடுவருக்கு வர இயலாமல் போனதாம்.
நடுவில் அமர சொன்னார்கள்.
பாசம் அடிக்கப்பட்ட பேப்பர்களில்
பணத்தை கழித்துவிட்டு
பொதுவான தீர்ப்பொன்று
சொல்லி திரும்பினேன்.
-நன்றி
என்.விநாயக முருகன்
பட்டிமன்றம் = இக்கவிதை
ReplyDeleteநாட்டாமை...தீர்ப்பை மாத்தீராதீங்க.நல்லா இருக்கு!
ReplyDeleteநாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு
ReplyDelete:-) nice
ReplyDeleteநன்றி அசோக்
ReplyDeleteநன்றி ராஜாராம்
நன்றி பாலா
நன்றி மண்குதிரை