வார்ப்பு.காமில் வெளியான எனது மூன்று கவிதைகளை வாசிக்க...
01.
ரயில் விளையாட்டு
----------------------------
வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து விளையாட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்.
02.
கோடுகள்
--------------
கையெழுத்து நேராக
வரவேண்டுமென்பதற்காக
கோடுப்போட்ட நோட்டு
ஒன்றை வாங்கி தந்தேன்
ஐந்து வயது மகளுக்கு.
எப்படி முயற்சித்தும்
எவ்வளவு திட்டினாலும்
கோட்டுக்குள் அடங்க மறுத்து
வெளியே வெளியே
வந்து விழுந்தன எழுத்துக்கள்.
கோபத்தில் இரண்டு அடியும்
வைத்தேன். சற்றுக் கழித்து
கோடுபோடாத நோட்டொன்றில்
கிறுக்கியவள் எழுத்துக்களுக்கு
ஏற்றாற்போல அழகாக கோடுகள்
வரைந்து என்னிடம் நீட்டினாள்.
03.
மவுன விளையாட்டு
-------------------------
வீட்டு விசேசமொன்றிற்கு
வந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய் விளையாடினார்கள்.
யாரோ அதட்டினார்கள்.
சொன்னா கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
மவுனத்தை கத்தியபடியே
அறையெங்கும் ஆடி ஓடி
அலைந்து சொன்னார்கள்.
-நன்றி
என்.விநாயக முருகன்
முதல் கவிதையும் மூன்றாவது கவிதையும் ஏற்க்கனெவே வாசித்திருக்கிறேன்.இரண்டாவது இப்பத்தான்.ரொம்ப பிடிச்சுருக்கு.
ReplyDeleteஏம்பா 1 & 3 மறுஒலிபரப்பு பண்ற...
ReplyDeleteஇரண்டாவுது zen கதை.. அம்பு ஏய்துவிட்டு சுத்தி வட்டம் போடறது.
அப்புறம் நம்மளுக்கு handwritinge வராதுப்பா.. குழந்தைய தொந்தரவு பண்ணாதப்பா... :)
mm muthal kavithaiyai eerkanavee vasiththirukkiren.
ReplyDeleteirunthaalum azhakaaka irukkiRathu nanba
2 nd mattum puthusu pola
ReplyDeletenalla irukku boss
உங்கள் சிற்சிறு சித்திரங்களாலான கவிதைகள், முடியும் பொது தொடங்கி விசால அனுபவங்களாக விரிகின்றன
ReplyDeleteநன்றி ராஜாராம்
ReplyDeleteநன்றி அசோக். (ஜென் கதைகளிலிருந்துதான் கவிதை எடுக்கறேன். கம்பெனி சீக்ரெட்)
நன்றி நண்பா மண்குதிரை.
நன்றி பாலா
நன்றி தயாளன்
மூன்று கவி விளையாட்டுகளும் எனக்கு மிகப் பிடித்திருக்கின்றன ... குறிப்பாக the train game
ReplyDeleteநன்றி நந்தா
ReplyDelete