Sunday, September 20, 2009

பசங்க

பசங்க
-----


மவுன விளையாட்டு
———————————————————

வீட்டு விசேசமொன்றிற்கு
வ‌ந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய்
விளையாடினா‌‌‌ர்கள்.
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
ஒவ்வொரு அறையாக
மவுனத்தை ஆடி ஓடி
பிரச்சாரம் செய்தார்கள்.


எதிர்வீட்டு கிருஷ்ணஜெயந்தி
——————————————————————————
புதிதாக குடிவந்த
எதிர்வீட்டு வாசலிலிருந்து
உள்நோக்கி சின்ன சின்ன
பாதச்சுவடுகளும்
பால்கோலமும்
கோணலும் மாணலுமாய்
கிறுக்கியபடி போயிருந்தது.
கிருஷ்ணஜெயந்தி அலங்காரமொன்றை
மனைவியிடம் குறைச்சொல்கையில்
உள்ளிருந்து வந்த
அழகான குழந்தைக்கு
காலொன்று வளைந்திருந்தது.


கவிதையெழுதி
——————————————
என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.
பிரசுரமாகாத கவிதையொன்றை.
இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று.

4 comments:

  1. முதல் "அழகு "
    இரண்டாவது :(((
    மூன்றாவது "பைனல் டச்

    ReplyDelete
  2. //உள்ளிருந்து வந்த
    அழகான குழந்தைக்கு
    காலொன்று வளைந்திருந்தது//
    கடவுளோடு எனக்கும் இவ்விஷயங்களில் பிணக்கு உண்டு. பெரும்பாலும் அவர் பதிலேதும் சொல்வதில்லை.

    //கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
    கேட்பவர்களுக்கு சொல்லவும்
    மிச்சமிருக்கிறது //
    பரவாயில்லை உங்களுக்கு சொல்லவும் மிச்சமிருக்கிறது ;)

    ReplyDelete
  3. மூணுமே நல்லா இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  4. நன்றி பாலா
    நன்றி அசோக்
    நன்றி ராஜாராம்

    ReplyDelete