Wednesday, September 2, 2009

பாரதி நகர்

பாரதி நகர்
——————————
ஊருக்கு வெளியே
நாற்பது கிலோமீட்டர் தள்ளி
நெடுஞ்சாலை கிளைபிரிக்கும்
அத்துவானக் காட்டில்
காலிமனைகளை
காண்பித்தான்.
பத்தடியில் சுவையான குடிநீர்
இரண்டு கிலோமீட்டரில்
பள்ளிக்கூடம் மற்றும்
பொறியியல் கல்லூரிகள்
கூப்பிடு தூரத்தில் மருத்துவமனை
உடனே வீடுக்கட்ட
உகந்தது என்றான்.
காலிமனை சுற்றியிருந்த
நிறைய தென்னைமரங்களை,
கத்தும் குயில்களை
காட்டினா‌‌‌ன்.
மஞ்சள் பெயர்ப்பலகை காட்டி
தன் பெயரும் பாரதிதானென்றான்.
அப்படியே
உங்க சொந்தத்தில
ஏதாவது பத்தினிப் பெண்ணிருந்தா
சொல்லுங்கவென்று
வந்தது வாய்வரை.



பொய்
—————
பொய் சொன்னால்
சாமி கண்ணைக் குத்துமென்று
சொன்னேன்
சிறுமி ஒருத்தியிடம்.
வாயைத்தானே…?
சந்தேகமாக கேட்டாள்.

9 comments:

  1. இரண்டு கவிதைகளையும் தொனிக்கும் எள்ளலையும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. நண்பர் மாதவன் சொன்னதுதான் எனக்கும் விநாயகம்.

    ReplyDelete
  3. முதலுக்கும் இரண்டாமானதுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ ...

    ReplyDelete
  4. பாரதி நகர்

    எல்லோருக்கும் இந்த‌ அனுப‌வ‌ம் இருக்கும். க‌விதை ந‌ன்றாக‌ இருந்த‌து.

    //வாயைத்தானே…?
    சந்தேகமாக கேட்டாள்//

    :)

    ReplyDelete
  5. நன்றி ஜமால். பொய்தான் தொடர்பு

    ReplyDelete