நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சிங்கம் என்ற கவிதை வாசிக்கலாம்
சிங்கம்
------
சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.
நன்றி
என்.விநாயக முருகன்
nalla iruku boss
ReplyDeleteஅருமை
ReplyDeleteவழக்கம்போல
ReplyDeletesuper nanba
ReplyDeleteநல்லாயிருக்கு வழக்கம்போல
ReplyDelete:)
மிக அருமையான கவிதை!
ReplyDeleteநன்றி பாலா
ReplyDeleteநன்றி நந்தா
நன்றி அசோக்
நன்றி மண்குதிரை
நன்றி நேசமித்ரன்
நன்றி சென்ஷி