கைப்பழக்கம்
-------------
நகரின் பிரபலமான
சித்த மருத்துவரை
ஒரு நேர்காணலுக்காக
சந்திக்க நேரிட்டது.
சொப்பன ஸ்கலிதம்,
கைகால் நடுக்கம்,
ஞாபக மறதி, உடல் அசதி
பற்றி விவரித்தார்.
வாலிப வயோதிக அன்பர்களை
அன்பாக கடிந்தவர் சில
அறிவுரைகள் சொன்னார்.
பேட்டி முடிந்து பேசினோம்
பொதுவான சில விஷயங்கள்
முன்னப் போல
யாரும் வருவதில்லையென்று
குறைப்பட்டார்.
ஆறும் பெண் குழந்தைகள்
கரையேத்தனுமில்ல
கவலைப்பட்டார்.
ஆறா...? சற்று வியப்புடனே கேட்டேன்.
என்ன இருக்கு நம்ம கையில
எல்லாம் கடவுள் கொடுத்தாரென்று
மேலே கைகாட்டினார்.
அப்படியா விநாயக்! அடக்கடவுளே.
ReplyDeleteநல்ல,sense of humour விநாயகம்.அதை கவிதைக்கு திருப்புவது புதுசா இருக்கு.நல்லாவும் இருக்கு.
ReplyDeleteநன்றி Ashok
ReplyDeleteநன்றி ராஜாராம்