திண்ணை.காமில் வெளிவந்த எனது "திருமணமொன்றில்" கவிதை வாசிக்க...
திருமணமொன்றில்
——————————————————
நான் சென்ற
திருமணமொன்றில்
மண்டப வாசலில்
அழகான நீண்ட
கூந்தலுடன்
இரண்டு கைகளை கூப்பி
தலையை லேசாக குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது.
பக்கத்தில்
பன்னீர் தெளிக்கும்
ஆண் உருவமும்
மின்சார பொம்மையென்று
யாரோ சொன்னார்கள்.
அட்சதை போடுமுன்
ஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன்.
-நன்றி
என்.விநாயக முருகன்
அட்சதை போடுமுன்
ReplyDeleteஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன். ]]
கிளாஸிக்.
//குறையொன்றுமில்லை
ReplyDeleteமறைமூர்த்தி கண்ணா
வாழ்வில் நிறைவென்று
எதைச் சொல்வது?//
இது கொஞ்சம் நல்லாயிருக்கு விநாயக் :)
நல்ல இருக்கு பாஸ்
ReplyDelete2050 க்கு பிறகு இதுவும் நிகழலாம் " அண்ணன் சேவியர் " ஒரு பதிவு போடுருந்தாறு பார்த்தீங்களா ?
பயமாத்தான் இருக்கு.கவிதை அழகாய் இருக்கு விநாயகம்.
ReplyDeleteநன்றி ஜமால்.
ReplyDeleteநன்றி அசோக்.
நன்றி பாலா. படித்துப் பார்க்கிறேன்.
நன்றி ராஜாராம்.
nalla irukku nanbare
ReplyDelete