Friday, September 4, 2009

நண்பரொருவரின் வீட்டில்

நண்பரொருவரின் வீட்டில்
———————————————————————

நண்பரொருவரின் வீட்டுக்கு
நீண்ட நாட்கள் பிறகு
செல்ல நேரிட்டது.
முன்புற வாசலில்
கன்றுக்குட்டி உயரத்தில்
நாயொன்று பயமுறுத்தியது.
சிரித்தபடியே அறிமுகப்படுத்திய
நண்பர் ஷேக்ஹேண்ட்
தரச் சொன்னார்.

புரோட்டின் கலந்த உணவு
மாத இறுதியில்
மருத்துவ சோதனை கூட
தடுப்பூசி போடுவதாக சொன்னார்.
நகங்களை சீராக
வெட்டிவிட வேண்டுமாம்.

ஜவ்வுகளை திங்காது.
துண்டுக்கறித்தான் உகந்தது.
கோழித் தொடையை
கிழிக்கத் தெரியாது.
பிய்த்து துண்டாக்கி
போட வேண்டுமாம்.

எலும்புகளை பச்சையாக
போடக்கூடாதாம்.
குக்கரில் வேகவைத்து
கொஞ்சம் மசித்து
கொடுக்க வேண்டுமாம்.

எல்லாம் சரி,
நாயின் பெயரென்ன?
நண்பரிடம் கேட்டேன்.
என்னை முறைத்தபடியே தொடர்ந்தார்.
நாயென்று சொல்லக்கூடாதாம்.
சரிதான்.

4 comments:

  1. பிரபல எழுத்தாளர் மாதிரி தெரியுது. அவரு நம்ம ஆஸ்தான writerபா.

    எனிவே கவிதை நல்லாயிருக்கு. நாய் வளக்கறவங்களுக்கு ஒரு possesiveness உண்டு.

    ReplyDelete
  2. நன்றி ஜமால்
    நன்றி அசோக் (சாரு என் குரு)
    நன்றி ராஜாராம்

    ReplyDelete